வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்த்துவைப்பேன் – சஜித்

வடக்கில்  பெண் தலைமைத்துவ குடும்பம், நுண்கடன், வேலையாய்ப்பு போன்ற பல்வேறான பிரச்சனைகள் உள்ளன.  நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின் இந்த பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை பெற்றுகொடுப்பதற்கு முன்னிற்ப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

யாழில் பல தேர்தல் பராப்புரை கூட்டங்களில் சஜித் பஙகுபற்றினார். அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஜனதிபதித் தேர்தலில் வாக்களித்த வடக்கு கிழக்கு மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொளக்கிறேன். யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களில் எனது மேற்ப்பார்வையின் கீழ் அபிவிருத்தி செயலணி ஒன்றை உருவாக்கி இவ் மாவட்ட்ங்களை அபிவிருத்தி செய்வதே எனது நோக்கமாகும்.

எதிர்வரும் 5ம் திகதி நாங்கள் அரசாங்கத்தை பொறுபேற்போம். அதன் பின்னர் மக்களுக்கு பல திட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றோம். அதன் ஒரு கட்டமாக வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட, வருமானம் குன்றிய ஒவ்வொரு  குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்காக தலா 20 000 ரூபாயினை வழங்க உள்ளோம்.

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை குறைவடைந்துள்ளது. ஆனால் இப்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம்  எரிபொருளின் விலையை குறைப்பதாக இல்லை. 5ம் திகதி அரசாங்கத்தினை அமைக்கின்ற போது 24 மணித்தியாலத்திற்குள் எரிபொருள் விலையினை குறைப்பேன் என்ற உறுதிமொழியினை வழங்குகின்றேன்.

நாங்கள் அரசாங்கத்தினை பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்குள் நான்கு வீதத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிலுக்கான கடன்களை வழங்குவோம்.

2009 மே 18 யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்களை கடந்த்துள்ளது. இதுவரை காலமும் உங்களுடைய வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் வடக்கை அபிவிருத்தி செய்தார்களா என கேள்வி எழுப்பினால் இல்லை என்றே பதில் கிடைக்கும்.

மக்களாட்சி என சொல்லில் மாத்திரம் இருக்காமல் செயலிலும் இருக்க வேண்டும் என நாம் எண்ணுகின்றோம் . மக்கள் தமது பிரதேசங்களில் அபிவிருத்தி திட்டங்களை மேற்க்கொள்ள கிராம இராட்சியம் நகர இராட்சியம்  போன்ற திட்டங்களை கொண்டுவரவுள்ளோம்

வடக்கு மக்களினுடைய வலி வேதனை எனக்கு தெரியும். வடக்கு மக்கள் எவ்வாறான வாழ்க்கையினை கொண்டு நடத்துகின்றனர் என தெரியும். அவர்களுடைய பொருளாதார சிக்கல்கள் தொடர்பிலும் நான் நன்கு அறிவேன். இலங்கையின் அரசியல் அமைப்பின் மூலம் நாட்டில் வாழும்  அனைவரும் சமமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.

நாம் இலங்கையர்கள் நாம் இலங்கையை ஒன்றாக முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எண்கள் எல்லோர் மனதிலும் எழவேண்டும் என்றார்.

– டிலக்சன்

Comments are closed.