புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் உரிமையாளர்களுக்கு திருப்பி ஒப்படைப்பு!

போர் காலகட்டத்தில் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் வங்கிகளிலும், அந்த அமைப்பிடம் இருந்தும் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு இதுவரை இராணுவத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த தங்கம், வெள்ளி, மாணிக்கம் மற்றும் நகைகள் நேற்று இராணுவ தலைமையகத்திலிருந்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
இவ்வாறு 120 பார்சல் தங்க நகைகள் ஒப்படைக்கப்பட்டன.
இலங்கை இரத்தினக்கல் மற்றும் நகை அதிகாரசபையால் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், அவை இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
இந்த தங்கப் பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், அவற்றின் மதிப்பு மற்றும் எடை அறிவிக்கப்படும். உரிய தங்கப் பொருட்களின் உரிமையாளர்கள் தங்களது அடையாளத்தை உறுதி செய்த பின்னர், மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.