கச்சேரி நல்லூரில் விபத்து, இருவர் காயம்

யாழ்ப்பாணம் – கச்சேரி நல்லூர் வீதியில் இன்று (01) மாலை இடம்பெற்ற விபத்தில் தாயும் பிள்ளையும் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கார் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்பாேது மோட்டார் சைக்கிளில் வந்த தாயும் பிள்ளையும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்துள்ளனர். இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.