கொழும்பில் கைக்குண்டுகளுடன் பெண் கைது

கொழும்பு – ஹோமாகமை, பிட்டிபன பகுதியில் வீடொன்றின் இரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 கைக் குண்டுகள், இரண்டு குண்டு துளைக்காத உடல் பாதுகாப்பு அங்கிகள், ஒரு ரிப்பீட்டர் சோர்ட் துப்பாக்கி மற்றும் 81 தோட்டாக்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றின்போதே குறித்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிட்டிபன பகுதியில் ஏற்கனவே 12 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட கட்டடத்தின் உரிமையாளருடன் தொடர்புகளைப் பேணியவர் என்பது தெரியவந்துள்ளது.

Comments are closed.