நாவலப்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தில் 15 மாணவர்களுக்கு கொரணா தொற்று.

கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட நாவலப்பிட்டிய வெஸ்ட்ஹோல் தமிழ் வித்தியாலயத்தில் 15 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலரும், ஆசிரியர்களும் கடந்த 2 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின.

இதன்படி 15 மாணவர்களுக்கும், ஆசிரியர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.