இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு நம்பிக்கை தரும் மாற்றங்கள்.

இலங்கை கிரிக்கெட்டின் நம்பிக்கையான மாற்றங்கள்!

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு நம்பிக்கை தரும் மாற்றங்கள் வர ஆரம்பித்திருக்கிறது. புதிதாக நியமனம் செய்யப்பட்ட கிரிக்கெட் குழுவில் முன்னாள் வீரர்களான அரவிந்த டீ சில்வா, ரொஷான் மஹாநாம, முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார ஆகியோர் நியமனம் பெற்றிருக்கிறார்கள்.

உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் அணிகளுக்கும், கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கும் ஆலோசகர்களாக வலம்வந்த இலங்கையின் அனுபவமிக்க முன்னாள் வீரர்கள் முதற் தடவையாக இலங்கை அணியின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்பட இருக்கிறார்கள்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

ஓய்வுக்கு பின் சுமார் 10 வருடங்கள் கழித்து முரளிதரன் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சியில் பங்குகொள்ள இருக்கிறார். அதுபோல, MCC நிர்வாகத்தையும், ராஜஸ்தான் ரோயல்ஸ் நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு சங்கா இலங்கையின் முன்னேற்ற பாதையை கவனிக்க போகிறார்.

இலங்கையின் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருக்கின்ற மாபியா முழுமையாக மாற்றம் பெறாமல், இந்த முன்னாள் வீரர்களின் எண்ணக்கருவும், வழிகாட்டலும் செயல்வடிவம் பெறுமா ? என்கிற கேள்வியே இலங்கை கிரிக்கெட் இரசிகர்களிடம் மேலெழுந்து நிற்கிறது.

Leave A Reply

Your email address will not be published.