கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு (video)

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (02) கூடி எடுத்த தீர்மானங்களுக்கு அமைய பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக துறைமுக அதிகார சபையின், ஶ்ரீலங்கா சுதந்திர ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்துள்ளார்.

3 பளுதூக்கிகளையும் கிழக்கு முனையத்தில் பொருத்தி, பணிகளை ஆரம்பிக்குமாறு ஏற்கனவே கோரப்பட்டதாக அவர் கூறினார்.

எனினும் அதற்கு தீர்வேதும் வழங்காதமையாலேயே நேற்றைய தினம் (01) 3 ஊழியர்கள் பளுதூக்கியின் மீதேறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததாக ஶ்ரீலங்கா சுதந்திர ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 3 பளுதூக்கிகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இந்த பளுதூக்கிகளை கிழக்கு முனையத்தில் பொருத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

Comments are closed.