அரசாங்கத்துக்கு தொல்லையாக இராமல் வெளியேறவும் : விமலுக்கு லங்சா கொடுத்த சாட்டை அடி

தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்காது தயவு செய்து அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்லுமாறு விமல் வீரவன்சவிற்கு அழைப்பு விடுப்பதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கட்சியில் பதவி வேண்டுமானால் அவர் தனது சகோதரருடன் அதுகுறித்து பார்த்துக் கொள்வார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடங்கும் போது கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு வௌியிட்டனர். அதனால் எமது கட்சி குறித்து பேச அவர்களுக்கு அருகதை இல்லை.

எமக்கு இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க நேரிடும். இவர்களுடன் பயணித்தால் நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியாது. மக்கள் நீங்கள் சொல்வதை கேட்பார்கள் என்றால் கட்சியை விட்டு விலகிச் செல்லலாம். இங்கிருந்து பிரச்சினை கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் கணவன் மனைவி பிரச்சினையை பேசித் தீர்க்க முடியாவிட்டால் தினமும் சண்டை போட்டுக் கொண்டா இருப்பார்கள்? இல்லை விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவர். அதனால் நாம் தயவுசெய்து சென்றுவிடுமாறு வேண்டுகிறோம்.

இவ்வாறு நிமல் லங்சா நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.