வீதி விபத்துக்களில் நாள் ஒன்றுக்கு 11 பேர் வரை பலியாவது சாதாரண நிலைமை கிடையாது.

வீதி விபத்துக்களில் நாள் ஒன்றுக்கு 11 பேர் வரை பலியாவது சாதாரண நிலைமை கிடையாது!அஜித் ரோஹண
வீதி விபத்துக்களினால் நாள் ஒன்றுக்கு 10 –11 பேர் வரை மரணிக்கின்றனர். மேலும் 40 பேர் வரையில் காயமடைகின்றனர். இந்நிலையில் வீதி விபத்துக்களினால் ஏற்படும் இழப்புகளை தவிர்த்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வீதி விபத்துக்களினால் நாள் ஒன்றுக்கு 10 – 11 பேர் வரை உயிரிழப்பதானது சாதாரண நிலைமை கிடையாது. இந்நிலையில் நேற்று (15) காலை ஆறுமணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் வாகன விபத்துகளினால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்த 11 பேரில் 9 பேர் நேற்று முன்தினம் இடம்பெற்ற வீதி விபத்துகளினால் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவரும் ஏற்கனவே இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்து சிகிச்சை பெற்றுந்தவர்களாவர்.
அதற்கமைய, 5 மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள், 4 பாதசாரதிகள், பயணி மற்றும் சாரதி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாட்டில் நாள் ஒன்றுக்கு 120 வீதி விபத்துகள் பதிவுச செய்யப்பட்டு வருகின்றன.

இதேவேளை , அதி கூடிய வேகம், மதுபோதையில் வாகனம் செலுத்துதல் , வீதி சமிக்ஞைகளை பின்பற்றாமை மற்றும் கவனக் குறைபாபட்டின் காரணமாகவே இவ்வாறு வாகன விபத்துகள்கள் இடம்பெற்று வருகின்றன. அதனால் இவற்றை தவிர்த்துக் கொள்வதற்காக மக்கள் மேலும் அக்கறை செலுத்த வேண்டும். வாகன மற்றும் வீதி விபத்துகளினால் ஏற்படும் நெருக்கடிகளை கட்டுப்படுத்திக் கொள்வதற்காக பொது மக்கள் மேலும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.