பேரணியில் பங்கேற்ற மனோவிடம் வாக்குமூலம் பெற்றனர் பொலிஸார்.

பேரணியில் பங்கேற்ற மனோவிடம்
வாக்குமூலம் பெற்றனர் பொலிஸார்.

வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நீதிக்கான பேரணியில் கலந்துகொண்டு, சட்டத்தை மீறியுள்ள குற்றச்சாட்டின் பேரில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனிடம், பொலிஸார் இன்று வாக்குமூலம் பெற்றனர்.

இது தொடர்பில் மனோக கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு:-

பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டு “சட்டத்தை மீறினேன்” என்ற குற்றச்சாட்டின் பேரில் எனது வாக்குமூலத்தைப் பெற வேண்டும் என ஸ்ரீலங்கா பொலிஸ் (எனது காவலர் மூலமாக) எனக்கு அறிவித்தது.

“வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பெறுங்கள். நேரம் தருகின்றேன்” என்று கூறியிருந்தேன்.

அதற்கிணங்க பொலிஸார் இருவர் வீட்டுக்கு வந்தார்கள். சுவையான தேனீரும், இறுக்கமான வாக்குமூலமும் கொடுத்தேன்.

மாங்குளம் பொலிஸ், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் AR154/21 என்ற இலக்கத்தின் கீழ் பெற்றதாகக் கூறப்படும் தடையுத்தரவை நான் பெப்ரவரி 6ஆம் திகதி மீறினேன் என்பதே குற்றச்சாட்டு.

எழுத்து மூலமாகப் பொலிஸுக்கு நான் கொடுத்த வாக்குமூலம் ஊடகங்களுக்கு விரைவில் வெளியிடப்படும்.

“நம்மகிட்ட மறைக்க, ஒளிக்க ஏதும் இல்லப்பா” என்று வீடு தேடி வந்த சி.ஐ. பரணகம, கான்ஸ்டபிள் நிஷங்க ஆகியோரிடம் சொன்னேன்.

முறிகண்டியில் அன்று பொலிஸ் பதிவு செய்த எனது உரைரையும் இவர்களுக்கு இன்று போட்டுக் காட்டினேன் – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.