அமெரிக்காவில் சேதமடைந்த காந்தியின் சிலை புணரமைப்பு

அமெரிக்காவில் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி சிலை  புனரமைக்கப்பட்டு மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அமெரிக்காவின் மினியாபொலிசில், பொலிஸாரால் கறுப்பின இளைஞன் ஜோர்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டார். இதனையடுத்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள், கலவரங்கள் நடந்தன.

தலைநகர் வோஷிங்டனில் அமைந்துள்ள இந்திய தூதரக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை கடந்த மாதம் சில விஷமிகள் அவமதிப்பு செய்தனர்.

இந்நிலையில் காந்தி சிலை மீள புனரமைக்கப்பட்டு மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவிற்கான இந்திய தூதுவர் தரன்ஜித்சிங் மற்றும் இரு நாட்டு தூதரக அதிகாரிகள், அமெரிக்க வாழ் இந்திய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்

Comments are closed.