அம்பாறை மாவட்டத்தின் கரையோர கிராமங்களில் சிறிதளவான நில அதிர்வு.

அம்பாறை மாவட்டத்தின் கரையோர கிராமங்களில் சிறிதளவான நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன் 4.0 ரிச்டெர் அளவில் குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டது.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், சர்வேதயபுரம்,சின்ன உல்லை, ஜலால்தீன் சதுர்க்கம் ஆகிய கடற்கரை கிராமங்களிலேயே குறித்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இன்று 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11:44 மணிக்கு குறித்த நில அதிர்வு உணரப்பட்தாகவும் சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் நில அதிர்வு உணரப் பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நில அதிர்வால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கும் பொதுமக்கள் சிறு பதற்றத்துடன் தாம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

சதாசிவம் நிரோசன்

Leave A Reply

Your email address will not be published.