ஆறு பொலிஸ் நிலைய அதிகாரிகள் சாணக்கியனிடம் விசாரணை.

சாணக்கியனை சுற்றிவளைத்து ஆறு பொலிஸ் நிலைய அதிகாரிகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கத்திடம் இன்று ஆறு பொலிசார் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியை மையப்படுத்தி இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மூதூர், காத்தான்குடி, கிளிநொச்சி, மாங்குளம், வாழைச்சேனை, சம்மாந்துறை ஆகிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் இன்றைய விசாரணைகளில் பங்கெடுத்திருந்தனர்.

P2P என்ற தலைப்பில் மூன்று நாட்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு பல தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், அதனையும் மீறி மக்களின் பெரும் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் காணி, அரசியல் கைதிகள் விடுதலை, மனித உரிமைகள், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, முஸ்லிம்களின் கொவிட் ஜனாசா எரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.

பொத்துவில் முதல் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பல இடங்களில் தடைகளும், இடையூறுகளும் ஏற்படுத்தப்பட்ட போதிலும், அவற்றையும் மீறி இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசனிடம் அண்மையில் விசாரணைகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் செயற்பட்ட சாணக்கியன் ராசமாணிக்கத்திடம் இன்று ஆறு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.