அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வென்றது நியூசிலாந்து.

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் கென்வேயின் அதிரடியில் வென்றது நியூசிலாந்து
முதலில் துடுப்படுத்தாடிய நியூசிலாந்து அணி சொற்ப ஓட்டங்களுக்கு விக்கெட்டினை பறி கொடுத்தாலும், மறுபுறம் டி.கென்வே நிலையாக நின்றுகொண்டார்.

இறுதி பந்து வரை அதிரடியில் மிரட்டிய கென்வே ஒரு ஓட்டத்தால் சதத்தையும் தவறவிட்டார்.

அவர் ஆட்டமிழக்காமல் 99* ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க நியூசிலாந்து 184 ஓட்டங்கள் பெற்றது.
பின்னர் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது.

மத்யு வேட் 12, பின்ச் 1, பிலிப்ஸ் 2, மக்ஸ்வெல் 1 என ஏமாற்ற மிட்சல் மார்ஸ் நிலையாக விளையாடினார்.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை தாக்குப் பிடிக்க முடியாமல் 133 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

Leave A Reply

Your email address will not be published.