இயக்கச்சியில் வெடிப்புச் சம்பவம், ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த இரவு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த பகுதியை சேர்ந்த தங்கராசா தேவதாஸன் (வயது 43) என்பவரே படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வெடிகுண்டு தயாரிப்பு மேற்கொள்ளும் போதே குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Comments are closed.