இந்தியாவின் ‘tik tork ‘ தடை – 45 ஆயிரம் கோடி ரூபா நஷ்டம்

இந்தியாவில் ‘tik tork’ செயலியிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் unicorn ByteDance நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் 45 ஆயிரம் கோடி ரூபாயிற்கும் அதிகமான தொகை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு இந்தியா அண்மையில் தடை விதித்தது.

இவற்றில், சீன தொழில்நுட்ப துறையில் ஜாம்பவானாக திகழும் unicorn ByteDance நிறுவனம் வசமுள்ள Hello, Vigo Video ஆகிய 3 செயலிகளும் தடை செய்யப்பட்டுள்ள இந்த 59 செயலிகளுக்குள் உள்ளடங்குகின்றன.

இந்த 3 செயலிகளுக்கும் இந்தியாவினால் தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் unicorn ByteDance நிறுவனத்திற்கு 6 பில்லியன் டொலர் ( இந்திய மதிப்பில் 45 ஆயிரம் கோடி) நஷ்டம் ஏற்படும் என்று unicorn ByteDance நிறுவனம்கணித்துள்ளது.

இந்த நஷ்டம், மற்றயை 56 செயலிகளுக்கு ஏற்படும் மொத்த தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.