இன்று முதலாவது ஜனாஸா ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய இன்று வெள்ளிக்கிழமை முதலாவது ஜனாஸா ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் கொரோனா தொற்று மூலம் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி வரை இரண்டு ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று மூலம் மரணித்த ஐந்து முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படவுள்ளது. அந்த வகையில் ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த இரு ஜனாஸாக்களும், காத்தான்குடியில் உள்ள மூன்று ஜனாஸாக்களுமாக ஐந்து ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் காணிகளை அண்மித்த இடங்களின் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்புடன் செயற்படுவதுடன், அனுமதி இல்லாதவர்கள் மற்றும் ஊடவியலாளர்கள் ஆகியோர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.