துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அஜித்..

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற தல! ரசிகர்கள் கொண்டாட்டம்.

தல அஜித், தமிழ்நாடு 46 வது துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், தங்க பதக்கம் வென்று தமிழகத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகவே ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாகவே தல அஜித், துப்பாக்கி சுடும் பயிற்சியில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்த நிலையில், மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10M Pistol உள்ளிட்ட பல்வேறு பிரிவில் 6 பதக்கங்களை அஜித் அணி வென்றுள்ளது.

தல அஜித்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும், நடிப்பில் படு பிஸியாக நடித்து வந்தாலும், தன்னுடைய மனதுக்கு பிடித்த துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகவே ரசிகர்கள் அஜித்துக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.