சிவ பெருமானை வழிபட மிக சிறப்பான நாள் தான் மகா சிவராத்திரி.

மகா சிவராத்திரி 2021 இந்த ஆண்டு மார்ச் 11 வியாழக்கிழமை இன்றைய தினம் உலகவாழ் சைவர்களால் அனுட்டிக்கப்படுகிறது.
சிவன் மற்றும் சக்தி தேவியின் ஒருங்கிணைப்பான அர்த்தநாரீஸ்வரரைக் கொண்டாடும் மிக முக்கியமான சைவ விரதம் மகா சிவராத்திரி ஒன்றாகும்.

ஒரு உயிரினம் முக்தி அடைய வேண்டுமானால் அந்த உயிர் மனிதனாகப் பிறக்க வேண்டும். மனிதனால் மட்டுமே முக்தி அடைய முடியும். அப்படிப்பட்ட மனித பிறவி எடுத்த நாம் முக்தி அடைய சிவ பெருமானை வழிபட மிக சிறப்பான நாள் தான் மகா சிவராத்திரி.

அன்றைய தினம் நாம் காலை முதல் இரவு முழுவதும் கண்விழித்து விரதம் இருந்து சிவபெருமானை வணங்கி அபிஷேக ஆராதனை செய்து வழிபட வேண்டும்.

மகா சிவராத்திரி விரத முறை:

மகா சிவராத்திரி கடைப்பிடிக்க வேண்டிய
சதுர்த்தசி திதி தொடங்குகிறது: 2021 மார்ச் 11 அன்று பிற்பகல் 02:39
சதுர்த்தசி திதி முடிவடைகிறது -மார்ச் 12ம் தேதி பிற்பகல் 03:02 வரை.

முதல் ஜாமம்

இரவு முதல் ஜாமம் பூஜை நேரம்: மாலை 06:27 முதல் 09:29 வரை

வழிபட வேண்டிய மூர்த்தம் – சோமாஸ்கந்தர்

அபிஷேகம் – பஞ்சகவ்வியம்
அலங்காரம் – வில்வம்
அர்ச்சனை மலர்கள் – தாமரை, அலரி
நிவேதனம் – பால் அன்னம்,சக்கரைப்பொங்கல்

பழம் – வில்வம்

சிவராத்திரி விரதம் இப்படி இருந்தால் ஈசனின் திருவடி நிழலில் இடம் கிடைக்கும்!

பட்டு – செம்பட்டு
தோத்திரம் – இருக்கு வேதம் , சிவபுராணம்
மணம் – பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்

வாசனைப் புகை போடுதல்- சாம்பிராணி, சந்தனக்கட்டை
தீப ஒளி- புட்பதீபம்
பாராயணம் – ரிக்வேதத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

இரண்டாவது ஜாமம்
இரவு இரண்டாவது ஜாமம் பூஜை நேரம்: 09:29 முதல் 12:31, மார்ச் 12
வழிபட வேண்டிய மூர்த்தம் – தென்முகக் கடவுள்
அபிஷேகம் – பஞ்சாமிர்தம்
அலங்காரம் – குருந்தை

அர்ச்சனை மலர்கள் – துளசி
நிவேதனம் – பாயசம், சர்க்கரைப் பொங்கல்

பழம் – பலா

பட்டு – மஞ்சள் பட்டு
தோத்திரம் – யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
மணம் – அகில், சந்தனம்
வாசனைப் புகை போடுதல்- சாம்பிராணி, குங்குமம்

தீப ஒளி- நட்சத்திரதீபம்
பாராயணம் – யஜூர்வேத பாராயணம் செய்யவும்

மூன்றாம் ஜாமம்
இரவு மூன்றாம் ஜாமம் பூஜை நேரம்: மார்ச் 12ம் தேதி 12:31 AM முதல் 03:32 AM

வழிபட வேண்டிய மூர்த்தம் – இலிங்கோற்பவர்
அபிஷேகம் – தேன், பாலோதகம்
அலங்காரம் – கிளுவை, விளா
அர்ச்சனை மலர்கள் – மூன்று இதழ் வில்வம், சாதி மலர்

நிவேதனம் – எள் அன்னம்
பழம் – மாதுளம்

பட்டு – வெண் பட்டு

தோத்திரம் – சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம் – கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
வாசனைப் புகை போடுதல்- மேகம், கருங் குங்கிலியம்
தீப ஒளி- ஐதுமுக தீபம்

பாராயணம் – சாமவேத பாராயணம் செய்யவும்

நான்காம் ஜாமம்
இரவு நான்காவது ஜாமம் பூஜை நேரம்: மார்ச் 12ம் தேதி 03:32 AM முதல் 06:34 AM
வழிபட வேண்டிய மூர்த்தம் – சந்திரசேகரர்(இடபரூபர்)
அபிஷேகம் – கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் – கரு நொச்சி

அர்ச்சனை மலர்கள் – நந்தியாவட்டை
நிவேதனம் – வெண்சாதம்

பழம் – நானாவித பழங்கள்

பட்டு – நீலப் பட்டு
தோத்திரம் – அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
மணம் – புணுகு சேர்ந்த சந்தணம்
வாசனைப் புகை போடுதல்- கர்ப்பூரம், இலவங்கம்

தீப ஒளி- மூன்று முக தீபம்
பாராயணம் – அதர்வண வேதம் பாராயணம் செய்யலாம்.

சிவராத்திரி பரண நேரம்: மார்ச் 12ம் தேதி அதிகாலை 06:34 AM முதல் பிற்பகல் 03:02 PM வரை

மகா சிவராத்திரி தினமானது மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மாலை முதல் மறுநாள் காலை வரை தொடர்ந்து ஒவ்வொரு ஜாமத்தில் சிவ பெருமானுக்கு பழங்கள், வில்வ இலை, இனிப்புகள் மற்றும் பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, ருத்ராட்சம் உள்ளிட்ட பொருட்களால் சிவ பெருமானுக்கு அபிஷேகம் நடத்தப்படும். ஒவ்வொரு ஜாமம் பூஜை முடிந்ததும் அலங்காரம் செய்யப்படும். பின்னர் மீண்டும் அடுத்த ஜாம அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்படும்.

அன்றைய தினம் அனைத்து சிவன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் குவிந்து சிவனை மனதார வழிபட்டு ஆசி பெறுவர். அன்று முழுவதும் சிவனுக்கு உகந்த சிவ புராணம், சிவ திருவிளையாடல்கள் போன்றவற்றை உச்சரித்து நற்பேறு பெறலாம்.

சிவனின் பாடல் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை, ‘ஓம் நமசிவாய’ என்ற எளிய மந்திரத்தை உச்சரித்தாலே அனைத்து ஐஸ்வர்யங்களும் பெற்றிடலாம்.

Leave A Reply

Your email address will not be published.