சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிராந்திய உத்தியோக பூர்வ இல்லம் திறந்து வைக்கப்பட்டது.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அமைக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் பிராந்திய உத்தியோக பூர்வ இல்லம் வெள்ளிக்கிழமை(19) காலை 9.00 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிருவாக பிரிவின் தலைவர் மேலதிக மன்றாடியார் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவத்தன அவர்களின் அழைப்பில் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புலத லிவேரா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உத்தியோக பூர்வ இல்லத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், சட்டமா அதிபர் திணைக்கள உத்தியோகஸ்தர்கள்,நீதிபதிகள்,மாவட்ட அரசாங்க அதிபர் பொலிஸ், இராணுவ அதிகாரிகள்,அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல த லிவேரா நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட பிராந்திய உத்தியோக பூர்வ இல்லம் அமைக்க கடந்த 2015 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 11ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.