பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு

எதிர்வரும் பொது தேர்தலில் வாக்களிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி பொது தேர்தலில் வாக்களிப்பு நேரம் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெறுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்கெடுப்பு இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.