பனியும்-வெயிலும் சேர்ந்து இருக்கும். இந்த பருவக்காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி.

பொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பனியும்-வெயிலும் சேர்ந்து இருக்கும். இந்த பருவக்காலத்தில் சருமத்தை பராமரிப்பது சற்று கடினமான ஒன்று. எனிலும் சில வழிகள் மூலம் சருமத்தை பாதுகாக்கலாம்.

தக்காளியில் உள்ள லைகோபீன் ஒரு சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றி. இது சருமத்தை ஊட்டச்சத்து மற்றும் புத்துணர்ச்சி தரும். தக்காளியை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவலாம். அல்லது துண்டு துண்டாக நறுக்கி அப்படியே முகத்தில் ஒட்டிவைத்து கொள்ளலாம். ஐந்து நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம்,

2 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 4 எலுமிச்சை பழங்களில் சாறு கலந்து சருமத்தின் மசாஜ் செய்யவும். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இது சருமத்திலுள்ள அழுக்குகளை அகற்றும். மேலும் சர்க்கரையில் உள்ள கிளைகோலிக் அமிலம் சருமத்தில் உள்ள செல்களில் ஊடுருவி, புத்துணர்ச்சியை உண்டாக்கும். சருமத்தில் ஏற்படும் வறட்சியை தடுக்கும்.

தினமும் இரவு கொழுப்பு நீக்கப்பட்ட தயிரை சருமத்தின் தேய்த்து ஸ்கிரப் செய்யவும். இது சருமத்தை சுத்தமாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும்.

நன்கு கனிந்த வாழைப்பழத்தை பிசைந்து சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும். இது சருமத்தில் ஏற்படும் வறட்சியை கட்டுப்படுத்துவதுடன் தேவையான ஊட்டச்சத்தையும் அளிக்கும்.

பப்பாளி மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தது. பப்பாளி பழத்தை நன்கு அரைத்து சருமத்தில் தடவவும். காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். பப்பாளியில் உள்ள நொதிகள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி செல்களுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.

கடலை மாவு மிகவும் நடுநிலையான மூலப்பொருள். சிறந்த சுத்தப்படுத்தி வறட்சி, முகப்பரு, வெயிலால் ஏற்படும் கருமை, இறந்த செல்கள், சுருக்கம், கறைகள், எண்ணெய் மற்றும் அழுக்கு ஆகியவற்றை குறைக்க கடலை மாவு உதவும். கடலை மாவை அனைத்து வகையான சருமத்தினரும் பயன்படுத்தலாம். கடலை மாவை தண்ணீரில் குழைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தாலம்.

வீட்டை விட்டு வெளியில் செல்லும் முன் தேங்காய் எண்ணெய்யை சருமத்தில் தேய்த்து கொள்வது நல்லது. இது சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவும்.

Leave A Reply

Your email address will not be published.