நடிகர் பக்ரு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழில் அற்புத தீவு, தலை எழுத்து, 7-ம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பக்ரு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா மீண்டும் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தி நடிகர் நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி வருகிறார்கள். இரு தினங்களுக்கு முன்பு இந்தி நடிகர்கள் அமீர்கான், கார்த்திக் ஆர்யன், மாதவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் பக்ருவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழில் அற்புத தீவு, தலை எழுத்து, 7-ம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பக்ரு. மலையாளத்தில் அதிக படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் பக்ரு வெளியிட்டுள்ள பதிவில், ”எனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி இருக்கிறேன். தற்போது வீட்டில் தனிமையில் இருக்கிறேன். விரைவில் பணிக்கு திரும்புவேன். அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள், முக கவசத்தை தவறாமல் அணியுங்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.