ரஜினி லெஜன்ட் சரவணன் சந்திப்பின் பின்னணி இதுதான்!

குளுகுளு மணலியில் சரவணன் நடித்துவந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஸ்டில்கள் அண்மையில் இணையத்தில் வைரலாகின

பிரபல இரட்டை இயக்குநர்கள் ஜேடி – ஜெரி இயக்கத்தில் சரவணன் முதல் முதலான தயாரித்து நடிக்கும் புதிய படத்தில் நடிகை கீதிகா திவாரி, பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ், ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், வேல்ராஜின் ஒளிப்பதிவில் ரூபன் எடிட்டிங் செய்யும் இந்த படத்துக்கு வைரமுத்து, பா.விஜய், சிநேகன் உள்ளிட்டோர் பாடல்களை எழுதுகின்றனர்.

இதனிடையே சரவணனுடன் இப்படத்தின் நாயகியாக பிரபல பாலிவுட் நாயகி ஊர்வசி ராவ்டேலா இணைந்து மணலி படப்பிடிப்பில் நடித்த சில காட்சிகளின் புகைப்படங்கள் தான் அண்மையில் வெளியாகியிருந்தன. இதேபோல் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துவரும் அண்ணாத்தே படப்பிடிப்பும் சென்னையில் முழுவீச்சில் நடந்துவருகிறது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், சரவணனும் இருவரும் தங்களது படப்பிடிப்புகளின் இடைவெளியில் சந்தித்து பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.