தான் விற்ற டிப்பரில் மோதியே பளையில் குடும்பத்தரும் பிள்ளைகளும் உயிரிழந்தனர்.

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த தந்தையும் விபத்தில் சிக்கிப் பலியாகியுள்ளார்.

பளை தர்மக்கேணி பகுதியைச் சேர்ந்தவர்களே விபத்தில் சிக்கியிருந்தனர்.

பளை இத்தாவில் பகுதியில் கடந்த இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 7, 14 வயதுகளை உடைய சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.

அதன்போது படுகாயம் அடைந்த தந்தை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தந்தையும் பிள்ளைகள் இருவரும் காரில் பயணித்தபோது மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் திடீரென திரும்பியதால் விபத்து இடம்பெற்றிருந்ததாக அந்தப் பகுதியில் நின்றிருந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே,

குறித்த விபத்தில் சிக்கியஅழகரத்தினம் சற்குனநாதன் ஒரு மணல் வியாபாரி ஆவார் ,அவர் வைத்திருந்த டிப்பர் வாகனமே அவர் உயிரிழக்கக் காரணமாக அமைந்ததாக தெரியவந்துள்ளது.

அவர் தன்னிடம் இருந்த டிப்பரை இன்னொருவருக்கு விற்பனை செய்திருந்ததாகவும் இருந்தபோதிலும் பெயர்மாற்றம்கூட இல்லாமல் வானத்தின் உடைமை காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

விபத்துக்கான காரணம் தொடர்பில் பளைப் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அவருடைய வாகனமே அவரின் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.