வவுனியாவில் ஆலயத்திற்கு தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர், சடலமாக மீட்பு!

வவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் இன்றையதினம் அந்த பகுதியில் உள்ள குளத்தில் தாமரைப்பூவினை பறிப்பதற்காக சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவரை காணவில்லை.இதனையடுத்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தேடுதல் மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பில், பொலிசாருக்கும் தெரியப்படுத்தினர்.

நீண்ட நேரத்தின் பின்னர் குறித்த ஆசிரியரின் சடலம் குளத்தில் இருந்து பொதுமக்களால் மீட்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் வவுனியா

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

நகரப்பாடசாலை ஒன்றைசெர்ந்த பரந்தாமன் வயது33 என்ற ஆசிரியரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் ஆலயம் ஒன்றின் தேவைக்காக தாமைரப்பூவை பறிக்கச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.