இலங்கை மீண்டெழ வேண்டும்! ஐ.நாவின் தீர்மானம் குறித்து கரு கருத்து.

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். உண்மையான ஜனநாயக நாடொக இலங்கை மீண்டெழ வேண்டும்.”

இவ்வாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“ஜெனிவாவில் இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது ஒரே நாட்டவர் என்ற வகையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அதேவேளை, நாட்டு மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஏதேனும் குறைகள் மற்றும் விடுபாடுகள் இருப்பின், அவை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும்.

உண்மையான ஜனநாயக நாடொன்றாக இலங்கை மீண்டெழ வேண்டும். ஏனெனில் ஒருபோதும் நாம் தனித்துச் செயற்பட முடியாது” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.