அரச போக்கு வரத்துச் சேவைக்கான பேருந்தில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று (30) அதிகாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை அரச போக்கு வரத்துச் சேவைக்கான பேருந்தில் பயணித்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த நிலையில், ஜெயபுரம் பகுதியில் வைத்து பேருந்தின் சக்கரத்திற்கு காற்று போய் இடை நடுவில் நின்றுள்ளது.

இதனால் குறித்த பேருந்தில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதோடு, நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் பிறிதொரு பேருந்தில் யாழ்ப்பாணம் நோக்கி தமது பயணத்தை தொடர்ந்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

குறித்த பேருந்தானது நீண்ட தூர பயணத்திற்கு உகந்தது இல்லை எனவும், பல்வேறு குறைபாடுகளுடேனேயே இயக்கப்பட்டு வருவதாகவும் பயணம் செய்த பயணிகள் விசனம் தெரிவித்தனர்.

குறிப்பாக குறித்த பேருந்தின் உள்ள இருக்கைகள் பயணிகள் அமர முடியாத நிலையில் சேதமடைந்த நிலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் பயணிகள் விசனம் தெரிவித்துளள்னர்.

அதிகாலை புறப்படும் குறித்த பேருந்து சேவையில், யாழ் வைத்தியசாலைக்கு செல்பவர்கள், திணைக்களங்களுக்கு கடமைகளுக்கு செல்வோரே வழக்கமாக பயணித்து வரும் நிலையில், இன்று இவ்வாறு அடைநடுவில் நின்ற காரணத்தினால் அவர்கள் அனைவரும் குறித்த நேரத்திற்கு உரிய இடத்திற்கு செல்ல முடியாது பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பேருந்துகளை சேவைகளில் ஈடுபடுத்துவதன் காரணமாகவே விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்த பயணிகள் உரிய அதிகாரிகள் இவ்விடையத்தில் தலையிட்டு மக்கள் போக்குவரத்திற்கு உகந்த பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.