வடமராட்சி மருதங்கேணியில் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு.

அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கின் அடிப்படையில் குணநலமிக்க ஒழுக்கம், சட்டத்தை பேணும் பண்பாட்டுடைய சமூகத்தை உருவாக்கும் எண்ணக்கருவிற்கு அமைவாக வடமராட்சி மருதங்கேணியில் பிரதம பொலிஸ் நிலையம் கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களாலும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்கள், பொலீஸ் திணைக்கள உயர்அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.