தேசத் துரோகிகளை அடையாளம் காட்டியுள்ளது ஜெனிவா தீர்மானம்

தேசத் துரோகிகளை அடையாளம்
காட்டியுள்ளது ஜெனிவா தீர்மானம்

– இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டு

“இலங்கை மீதான ஐ.நா.தீர்மான வாக்கெடுப்பு முடிவுகள் தாய் நாட்டை உண்மையாக நேசிப்பவர்களையும், பணம் மற்றும் அதிகாரத்துக்காகத் தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கத் தயாராக உள்ளவர்களையும் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளது.”

– இவ்வாறு இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜெனிவா விவகாரத்தில் தாய் நாட்டின் நலனுக்கு முன்னுரிமை வழங்கிய குழுவினரையும், பணம் மற்றும் அதிகாரத்துக்காக நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்லத் தயாராகவுள்ள குழுவினரையும் நாம் அடையாளம் கண்டுகொண்டோம்.

ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்குரிய சாத்தியங்கள் இல்லை.

ஐ.நா. மனித உரிமைகள் சபையைப் பயன்படுத்தி சில பிரிவினர் இலங்கையை இழிவுபடுத்த முயற்சிக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் நாட்டை இழிவுபடுத்தும் முயற்சிகளில் கைகோர்த்துள்ளன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.