முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தி.

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினையும் உயிர்த்தெழுதலையும் உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்கள் நினைவுகூரும் இத்தருணத்தில் இலங்கை வாழ் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எனது உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் சுயநலமன்ற தாழ்மையான தியாகம் நிறைந்த வாழ்க்கையானது எல்லா மனிதர்களும் சமமாகவும் சுயமரியாதையுடனும் நடாத்தப்பட வேண்டும் என மனிதகுலத்திற்கு சவால் விடுகின்ற ஒன்றாக காணப்படுகின்றது.

எதிர்பார்ப்பு புதிய வாழ்க்கை மனதுருக்கம் என்பவற்றினை பிரதிபலிக்கும் உயிர்த்த ஞாயிற்றினை கொண்டாடும் நாம் பன்முகத்தன்மையையும் சமத்துவத்தினையும் பேணும் ஒரு நாட்டினை கட்டியெழுப்பும் முகமாக உயிர்த்த ஞாயிற்றின் பண்புகளை கடைபிடித்து வாழ முன்வருவோமாக. மேலும் உயிர்த்த ஞாயிறானது குறுகிய காலத்தில் ஏற்படும் சவால்களை கண்டு
நாம் மனந்தளர்ந்து போகாமல் உன்னதமான வெற்றியினை அடையும் நோக்கில் நம்பிக்கையோடு ம் உறுதியோடும் இருக்க வேண்டும் என்பதனையும் எமக்கு நினைவூட்டி நிற்கின்றது.

இப்புனித தினத்தினை கொண்டாடும் இத்தருணத்தில் குறைந்த வசதிகளோடுள்ள மக்களிற்கும் சமூகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மக்களிற்கும் எமது கரங்களை நீட்டுவதன் மூலம் உயிர்த்த ஞாயிற்றினை அர்த்தமுள்ள ஒன்றாக கொண்டாடுவோமாக.

Leave A Reply

Your email address will not be published.