யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை சில மாதங்களில் ஆரம்பிக்க முடிவு!

யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவையை அடுத்த சில மாதங்களில் மீண்டும் தொடங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் விமான நிலையம் மூன்று கட்டங்களாக மேலும் அபிவிருத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1000 பயணிகளைக் கையாளும் வகையிலான முனையம் உருவாக்கப்படும். அத்துடன் பெரிய விமானங்கள் சேவையில் ஈடுபடக்கூடிய வகையில் விமான நிலை ஓடுபாதை மேலும் விரிவுபடுத்தப்படும் எனவும் அமைச்சா் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் யாழ்ப்பாண விமான நிலையம் சா்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டு யாழ்ப்பாணம் – தென்னிந்தியா இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் இந்த விமான சேவைகள் முடங்கின. இதற்கு கோவிட்19 தொற்று நோய் நெருக்கடியும் ஒரு காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.