இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் 44 பேர் உயிரிழப்பு.

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, குறைந்தது 44பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையைக் கொண்டாட மக்கள் விழித்ததற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், பெய்த மழையால் கத்தோலிக்க பெரும்பான்மையான புளோரஸ் தீவில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதே நேரத்தில் தீவின் கிழக்கு முனையில் பாலங்கள் மற்றும் வீதிகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் அழிக்கப்பட்டன.

கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் ஒன்பது பேர் காயமடைந்து 44 பேர் உயிரிழந்ததாகவும், இன்னும் சேற்றுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும் தேசிய பேரிடர் தணிப்பு முகமை செய்தித் தொடர்பாளர் ராதித்யா ஜாதி தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் வாரத்தில் தீவிர வானிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜாதி மேலும் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை தனித்தனியாக, அண்டை மாகாணமான மேற்கு நுசா தெங்காராவில் உள்ள பீமா நகரில் வெள்ளம் ஏற்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக பேரிடர் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.