கொழும்பில் நேற்று இடம்பெற்ற மிஸிஸ் ஸ்ரீலங்கா போட்டியில் குழப்பம் (வீடியோ)

மிஸிஸ் ஸ்ரீலங்கா போட்டியில் குழப்பங்கள் – வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டு கிரீடம் சூட்டப்பட்டவர் விவாகரத்தானவரா என சர்ச்சை.

மிஸிஸ் ஸ்ரீலங்கா போட்டியில் கலந்துகொண்ட புஸ்பிகா டி சில்வா வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் குழப்பநிலை ஏற்பட்டது.

புஸ்பிகா டி சில்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கரோலின் ஜூரி என்பவர் அவருக்கு கிரீடம் சூட்டியுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

வெற்றி பெற்றவருக்கு பிரதமரின் பாரியார் சிராந்தி ராஜபக்ச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

எனினும் சில நிமிடங்களின் பின்னர் வெற்றிபெற்றவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் எனத் தெரிவித்துள்ள ஜூரி தான் இரண்டாவது இடத்தைப் பெற்றவரை வெற்றியாளராக அறிவிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதன் பின்னர் அவர் மேடையில் வைத்து புஸ்பிகா டி சில்வாவிடமிருந்து கிரீடத்தை அகற்றி இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டவருக்கு சூட்டியுள்ளார்.

எனினும் பின்னர் புஸ்பிகா டி சில்வாவே மீண்டும் தெரிவு செய்யப்பட்டார் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மேடையில் முன்னைய மிஸிஸ் ஸ்ரீலங்கா ஆன புஸ்பிகா டி சில்வா திருமணமாகி விவாகரத்து பெற்றவரில்லை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததோடு , அவர் விவாகரத்தானவர் என்பதற்கான ஆவணங்கள் எதுவுமில்லை என மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.