முன்னாள் பொதுச்சேவை ஆனைக்குழுவின் உறுப்பினராகிய வே.சிவஞானசோதி காலமாகிவிட்டார்.

மீள்குடியேற்ற மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஐனாதிபதி செயலணியின் முன்னாள் செயலாளரும் தற்போது பொதுச்சேவை ஆனைக்குழுவின் உறுப்பினருமாகிய வே.சிவஞானசோதி காலமாகிவிட்டார்.

இலங்கை நிர்வாக சேவையில் தரம்மிகு சேவையாளராகவும் எந்த ஆட்சிக் காலத்திலும் அரசுகள் மாறினாலும் தான் ஏற்கின்ற பொறுப்பை செவ்வனே ஆற்றி வளைவு சுழிவுகளுக்கு இடங்கொடாது அரசியல்வாதிகளுக்கு அடிமையாக வாழாது கட்சிபேதங்கடந்து அனைத்து அரசியல் தலைவர்கள் மத்தியிலும் நன்மதிப்புப் பெற்ற நேர்மையான மக்கள் தொண்டன்.

மாவட்ட அபிவிருத்திக்கும் உயர்வுக்கும் பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கி வந்த உயர்திரு வி.சிவஞானசோதி இழப்பு பேரிழப்பாக அமைந்திருக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.