பளை வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர் பலி

பளை – இயக்கச்சி பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பளை பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  இந் நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

குறித்த வெடிப்புச் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என ஆசிரியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.