நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளின் தொடர்ச்சியாக 3 விண்வெளி வீரர்கள் இணைந்தனர்.

நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளின் தொடர்ச்சியாக 3 விண்வெளி வீரர்கள் இன்று (09) சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (international space station) ரஷ்யாவின் சோயுஸ் Soyuz MS-18 விண்கலத்தில் பயணித்துள்ளனர்.

கஜகஸ்தானிலுள்ள பைகானூர் (Baikonur) ஏவுதளத்திலிருந்து Soyuz 2-1A ரொக்கெட் விண்ணில் வெற்றிகரமாக மாலை 2 மணியளவில் ஏவப்பட்டது.

நாசாவின் இந்த 3 விண்வெளி வீரர்களில் ஒரு அமெரிக்க வீரரும் (Mark Vande Hei) இரண்டு ரஷ்ய வீரர்களும் Oleg Novitskiy, Pyotr Dubrov பயணிக்கின்றனர்.

சுற்றுவட்ட பாதையில் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டவுடன் ஏவப்பட்ட ரொக்கெட் பூமியை வந்தடையும். விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று எயார் லொக் செய்யப்பட்டு 3 விண்வெளி ஆராய்ச்சி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள் அவர்களை வரவேற்பார்கள்.

இதேவேளை செவ்வாயில் தரையிறக்கப்பட்டுள்ள பெர்சவரன்ஸ் ரோவரில் இருந்து கிடைக்கும் தகவல்களையும் இவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.