ரயில் சேவையை முடக்கிய பண்டாரவளை லொறி விபத்து.

பண்டாரவளை – எல்ல தோட்ட பகுதியிலுள்ள ரயில் பாதைக்கு அருகாமையில் கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானது. இதனால் குறித்த ரயில் வீதி ஊடான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

கொழும்பிலிருந்து பொருட்கள் ஏற்றிவந்த சரக்கு லொறியொன்றே இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இதனால் பதுளையிலிருந்து கண்டிக்கு பயணித்த ரயில் பண்டாரவளை ரயில் நிலையத்திலும் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வந்த பயணிகள் ரயில் அப்புத்தளை ரயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

லொறியை மீட்கப்பட்டதும் ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.