உருத்திரபுரம் சிவன் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை – கூட்டமைப்பினர் நேரில் ஆய்வு!

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் ஆலய மண்டபத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன், எஸ்.சிறிதரன் ஆகியோர் தலைமையில் இடத்பெற்ற குறித்த கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

குறித்த ஆலய வளாகத்தில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட எடுத்த முயற்சியினை அடுத்த அப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம் என தெரிவித்து குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தொடர்ந்து குறித்த குழுவினர் ஆலய வளாகத்தில் காணப்பட்ட பண்டையகாலத்து கருங்கல் தூண்களையும் பார்வையிட்டனர்.

தொடர்நது ஊடகங்களிற்கு நாடாளுமன்ற உறு்பபினர்களான எம்.ஏ. சுமந்திரன், எஸ் சிறிதரன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.