வர்த்தக நிலையங்கள் சுகாதார அதிகாரிகளால் சுற்றிவளைப்பு.

சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திறக்கப்பட்டிருக்கும் மட்டக்களப்பு – காத்தான்குடி நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் சுகாதார அதிகாரிகளினால் நேற்று மாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.நபீல் தலைமையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.பஷீர் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது காத்தான்குடி பிரதான வீதி உட்பட கடற்கரை வீதி, ரெலிகொம் வீதி போன்ற வீதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்று சுகாதார நடைமுறைகள் தொடர்பாக அவதானித்ததுடன், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அத்துடன் உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், ஹோட்டல்கள், பல சரக்கு விற்பனை நிலையங்கள் போன்ற வர்த்தக நிலையங்களுக்கு சென்ற சுகாதார அதிகாரிகள் உணவுப்பொருட்களையும் பரிசோதனை செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.