முற்றத்தில் வைக்கப்பட்ட கோடாரியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் படுகாயம்.

வீட்டு முற்றத்தில் இருந்த கோடாரியை எடுத்து வைக்க சென்றவர் மீது மின்னல் தாக்கி படுகாயம்.

மழை பெய்து கொண்டிருந்த நிலையில் முற்றத்தில் கிடந்த கோடரியை எடுத்துவைக்க சென்றவர் மின்னல் தாக்கியத்தில் 28 வயதான குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வேணாவில் 1ம் வட்டாரத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

வேணாவில் கிராமத்தினை சேர்ந்த 28 அகவையுடைய ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயக்குமார் என்ற குடும்பஸ்தரே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

மழை பெய்து கொண்டிருந்தவேளை வீட்டு முற்றத்தில் காணப்பட்ட கோடலியினை பாதுகாப்பாக எடுத்துவைப்பதற்காக குடைபிடித்துக்கொண்டு சென்றுள்ளார்.

மின்னல் முற்றத்தில் நின்ற வேப்பமரத்தில் தாக்கியுள்ளது இதன்போது குறித்த குடும்பஸ்தரும் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

வயிற்றிலும், காலிலும் எரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் அயலவர்களின் உதவியுடன் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.