வாள்வெட்டு சம்பவத்தோடு தொடர்புடைய ஐவர் கைது

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக முன்பாக மாவட்ட செயலக சுற்றுச்சூழல் அதிகார சபை உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரின் நடவடிக்கையில் சந்தேக நபர்கள் நேற்று(08) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மல்லாகத்தில் வைத்து சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரு வாள்கள், கைக்கோடரி ஒன்று, இரு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மல்லாகம் கனி எனப்படும் குழுவை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்தவரும் முன்னர் அந்தக் குழுவில் இருந்துள்ளார் என்ற பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed.