ராஜபக்ச அரசை பங்காளிகள் ஒருபோதும் வீழ்த்தாது! – சித்தார்த்தன் எம்.பி. கூறுகின்றார்.

ராஜபக்ச அரசை வீழ்த்துகின்ற நிலையில் அதன் பங்காளிக் கட்சிகள் ஒருபோதும் இருக்காது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“அரசுக்குள் சில குழப்பங்கள் ஏற்பட்டிருந்தாலும் உடனடியாக அரசில் மாற்றம் ஏற்படும் என்று நான் நம்பவில்லை.

அதில், ஒரு பலவீனமான நிலையை ஏற்படுத்தலாமே தவிர, அரசை வீழ்த்துகின்ற நிலையில் பங்காளிக் கட்சிகள் இருக்காது.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலில் தொகுதிக்கு மூன்று பேரை நியமிப்பது என்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் யோசனை நாட்டின் எந்தப் பகுதிக்கும் சாத்தியமில்லாத மற்றும் குழப்புகின்ற ஒன்றாகும்.

ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொருவரை நிறுத்திவிட்டு அவற்றைத் தாம் வென்றெடுக்கலாம் என்று பஸில் ராஜபக்ச எண்ணியிருக்கலாம். அதற்காக இப்படியொரு திட்டத்தை வைத்திருக்கலாம். இது ஜனநாயகத்தையும், அரசியல் கட்சிகளையும் கேலிக்கிடமாக்கும் விடயமாகவே நான் பார்க்கின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.