புதுக்காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளுடன் ஒருவர் நேற்று கைது.

கிளிநொச்சி வட்டக்கச்சி புதுக்காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டக்கச்சி புதுக்காட்டு பகுதியின் காட்டில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி உயிருடன் இறைச்சியாக்குவதற்கு தயாராக வைத்திருந்திருந்த நிலையில் கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வீட்டினை சோதனையிட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த ஐந்து உடும்புகளை மீட்டதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்து இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவித்ததுடன் எதிர்வரும் ஐந்தாம் மாதம் 10ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த உடும்புகளை வனத்தில் விடுமாறும் பணித்திருந்தார். அதற்கமைய குறித்த உடும்புகள் சுண்டிக்குளம் சரணாலயத்தில் இன்று பிற்பகல் விடப்பட்டது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

Leave A Reply

Your email address will not be published.