மறைத்து வைக்கப்பட்டிருந்த 185 Kg கஞ்சா மீட்பு!

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 185 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, பள்ளிகுடா பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார், 54ஆம் பிரிவு இராணுவ புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, இந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

70 பைகளில் காணப்பட்ட 185 கிலோ கிராம் கஞ்சாவை பள்ளிகுடா பிரதேசத்தில் மறைத்து வைத்தது யார் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள இராணுவத்தினர், மேலதிக விசார​ணைக்காக கைப்பற்றப்பட்ட கஞ்சாவை கிளிநொச்சி பொலிஸ் விசேட படை முகாமிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.