ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம் தொடர்பில் இணைப்பாளரின் கள விஜயம்

கிராமத்துடன் கலந்துரையாடல் “கம சமக பிலி சந்தர” நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ அவர்களின் கிராமங்களுக்கான நேரடி விஜயத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும் மே மாதம் முதலாம் வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

இதனடிப்படையில் 06.05.2021 அன்று ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்படத்தக்கது.

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்திற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான இணைப்பாளராக சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் அவர்கள் நியமிக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் துரிதமாக இடம்பெற்றுவருகின்றது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

ஜனாதிபதியின் வருகையினை முன்னிட்டு ஜனாதிபதி வருகைதரவுள்ள இடங்களை பார்வையிடுவதற்கான கள விஜயமும் இன்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதியின் இணைப்பாளர் இசுரு ஹேரத் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்படத்தக்கது.

– Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.