சங்கைக்குரிய திக்வெல்லே திஸ்ஸ தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி.

ஸ்ரீ சத்தம்மவங்ச மகா நிக்காயவின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய திக்வெல்லே திஸ்ஸ தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை….

காலஞ்சென்ற அமரபுர ஸ்ரீ சத்தம்மவங்ச மகா நிக்காயவின் அனுநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய திக்வெல்லே திஸ்ஸ தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்.

பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் வெவுருகன்னல புதுரஜ மகா விகாரைக்கு இன்று (22) முற்பகல் சென்ற ஜனாதிபதி அவர்கள், தேரரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், விகாரையில் வைக்கப்பட்டிருக்கும் அனுதாப பதிவேட்டிலும் குறிப்பொன்றை பதிவு செய்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அமரபுர ஸ்ரீ சத்தம்மவங்ச மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய அஹூங்கல்லே ஸ்ரீசீல விசுத்தி நாயக்க தேரரின் தலைமையில் அனுநாயக்க தேரர்கள் மற்றும் பதிவாளர்களை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க ஆகியோரும் ஜனாதிபதி அவர்களுடன் இங்கு வருகை தந்திருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Leave A Reply

Your email address will not be published.