வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரணா.விடுதிக்கு பூட்டு.

ஹொரவ்பொத்தான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு இன்று (23) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வைத்தியசாலையின் பெண்கள் விடுதி மற்றும் குழந்தைகள் விடுதி என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஹொரவ்பொத்தான, கிவ்லேகட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி தனக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பதாகக் கூறி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவரது அறிகுறிகளில் உள்ள சந்தேகம் காரணமாக அவர் 21 ஆம் திகதி அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அதன்படி, அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை இன்று (23) தெரியவந்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளித்த ஹொரவ்பொத்தான வைத்தியசாலையின் மருத்துவர் உள்ளிட்ட உதவியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹொரவ்பொத்தான வைத்தியசாலையில் இரண்டு விடுதிகள் மூடப்பட்டிருந்தாலும், வைத்தியசாலையில் ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.