புதுதில்லியில் திறந்த வெளிகளில் உடல்களை எரிக்கும் அவலம்….

புதுடில்லியில் திறந்தவெளிகள் , வாகனத்தரிப்பிடங்கள் உடல்களை புதைக்கும் இடங்களாக மாறும் அவலம் – ஒரே தடவையில் பல உடல்கள் தகனம்.

இறுதியில் மயானமொன்றின் வாகனத்தரிப்பிடத்தில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட பகுதியில் அவர் தனது தாயாரின் உடலை தகனம் செய்தார்.  நான் அந்த தூணிலிருந்து இந்ததூண் வரை ஓடினேன், ஒவ்வொரு மயானத்திலும் ஏதாவதுஒரு காரணம் பிரச்சினை காணப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

ஒரு மயானத்தில் விறகுஇல்லை என தெரிவித்தார்கள் என அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் இரண்டாவது நாளாக இன்றும் 330,000க்கும் அதிகமானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மருத்துவமனைகளில் ஒக்சிசன் முடிவடைந்துள்ள புதுடில்லியில் நாளாந்தம் 26.000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்புகள் 2263 ஆக அதிகரித்துள்ளன.
இந்திய தலைநகரில் தங்கள் குடும்பத்தவர்களை பறிகொடுத்துள்ளவர்கள் அவர்களை தகனம் செய்வதற்காக தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள பகுதிகளை நாடுகின்றனர்.

திறந்த வெளிகளில் உடல்கள் எரிக்கப்படுவதையும்,வாகனத் தரிப்பிடங்களில் விறகுகள் குவிக்கப்பட்டு உடல்கள் எரிக்கப்படுவதையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

அரசசார்பற்ற மருத்து அமைப்பொன்றை நடத்தும் ஜிதேந்தர் சிங் சண்டி என்பவர் வியாழக்கிழமை வாகனத்தரிப்பிடமொன்றில் 60 உடல்கள் தகனம் செய்யப்பட்டன என தெரிவித்தார். மேலும்15 உடல்களை தகனம் செய்யதீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் எவரும் இவ்வாறான காட்சிகளை பார்த்திருக்கமாட்டார்கள் என கண்ணீருடன் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்புஉடை அணிந்தவாறாக காணப்பட்ட அவர் கடந்தவருடம் கொரோனாவின் முதலாவது அலையின் போது எட்டு முதல் பத்து உடல்களை தகனம் செய்ய உதவியதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் செவ்வாய்கிழமை 78 உடல்களை ஒரே இடத்தில் தகனம் செய்தேன் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை அரசசுகாதார பணியாளரான தனது தாய் 10 நாட்களிற்கு முன்னர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வேளை அவருக்கு மருத்துவவசதியை வழங்குவதற்கான இடத்தை அதிகாரிகளால் வழங்கமுடியவில்லை என நிதீஸ் குமார் தெரிவித்தார்.

அரசாங்கம் எதனையும் செய்யவில்லை உங்களால் மாத்திரம் உங்கள் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.