இலங்கை: Covid புதிய சுகாதார விதிமுறைகள்!

இலங்கையிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் மே மாதம் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் புதிய சுகாதார விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, ஒரு வீட்டிலிருந்து அத்தியாவசிய தேவைக்காக இருவர் மாத்திரமே வெளியில் செல்ல முடியும்.

பஸ் மற்றும் ரயில் போன்ற பொதுப் போக்குவரத்துக்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாத்திரமே பயணிகள் அனுமதிக்கப்படும்.

முச்சக்கர வண்டியில் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும் . கார் போன்ற தனிப்பட்ட வாகனங்களில் இருக்கைக்கு அளவாக பயணிக்க வேண்டும்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், அலுவலகங்களில் குறிப்பிட்டளவு ஊழியர்களை மாத்திரமே அழைப்பதற்கும் , பெரும் எண்ணிக்கையானோரை வீடுகளிலிருந்து வேலை செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கப்பட வேண்டும்.

கூட்டங்கள் , மாநாடுகள் உள்ளிட்டவற்றுக்கு அவை ஏற்பாடு செய்யப்படும் மண்டபத்தில் பங்குபற்றக் கூடியவர்களின் எண்ணிக்கையில் 50 சத வீதமானோர் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும்.

சுப்பர் மார்கட்டுக்கள், சிறு விற்பளை நிலையங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், வங்கிகள் , பொது சந்தைகள், பேக்கரிகள், சிகை அலங்கார நிலையங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றில் 50 சத வீதமானோரை மாத்திரம் அனுமதித்தல், மேலும் அங்கு தனிநபர் இடைவெளியைப் பேணுதல் மற்றும் அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதற்கான வசதிகள் என்பன செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

நீதிமன்ற கட்டட தொகுதி, சிறைச்சாலை, வைத்தியசாலைகள் உள்ளிட்டவற்றிலும் மேற்கூறிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

ஆரம்ப பாடசாலை, பாடசாலைகளில் 50 வீத மாணவர்கள் மாத்திரம் உள்வாங்கப்படுவதோடு, பல்கலைக்கழங்கள், தனியார் வகுப்புக்கள் மூடப்பட வேண்டும்.

திருமண நிகழ்வுகளில் 150 பேரும், மரண சடங்கில் 25 பேரும் பங்கு கொள்ள மட்டுமே என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.